கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு (18) விவசாயிகளின் பல ஏக்கர் வயல் நிலங்கள் காட்டுயானைகளால்
நாசமமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நெற்கள் விதைத்து ஒன்றரை மாதங்களே ஆன பயிர்களையே யானைகள் அழித்துள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக காட்டுயானைகளால் தமது நெல் வயல்கள் அழிவடைவதாகவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.