கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (18) இரவு 10 மணியளவில் நீர்வேலி, வில்லுமதவடிக்கு அண்மையான பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைதடிப் பகுதியில் மின்னொளியில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய இளைஞன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கலைப்பிரியன் என்பவரே உயிரிழந்துள்ளார் .