நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
இதன்படி, மாதாந்தம் 67,500 ரூபாய் கொடுப்பனவுடன் ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் 320 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி மேற்குறித்த தகவல்களை வெளியிட்டார்.