நாடாளவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் மேற்க்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்கவிற்கும் இடையில் நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்ததாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக்க எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பை தொடரரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.