யாழ்ப்பாணம் – அச்சுவேலிப் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் ஊடகவியலாளர் த.பிரதீபனின் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் வீட்டில் இருந்த உடமைகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.
குறித்த தாக்குதல் நடத்திய குழுவினரை அழைத்து வந்து ஊடகவியலாளரின் வீட்டை அடையாளம் காட்டியவர் மற்றும் தாக்குதல் மேற்கொண்ட
இருவர் என மூவரை அச்சுவேலிப் பொலிஸார் நேற்று (18) கைது செய்தனர்.
குறித்த தாக்குதலில் ஈடுபட்ட குழுவுக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து பணம் வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.