அம்பாறை – காரைதீவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய சிவகரன் அக்சயன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் அண்மையில் வெளியான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தினைப் பெறறு மருத்துவத்துறைக்குத் தெரிவாகியிருந்தார்.
தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கு தரித்துவிட்டு இன்று(14) காலை வரும்போது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.