கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில்,கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர ஆரம்பமாகவுள்ளதால் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.