தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு நாளையும் (07) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை,ஹொரனை மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளுக்கே நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.