ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ கரலியத்த ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சராகவும் உள்ளுர் மருத்துவத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் மதவாச்சி பிரதேசத்தின் இணை அமைப்பாளராக நியமிக்க உள்ளதாக தெரியவருகிறது.