நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் 3727 குடும்பங்களைச் சேர்ந்த 11864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 17 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 3304 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாணங்களைப் பொறுத்தமட்டில், தென் மாகாணத்தில் 1982 குடும்பங்களை சேர்ந்த 6840 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3005 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.