திருகோணமலை – மூதூர் புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் மூதூர் – அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய இர்பான் இபாம் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இதனயடுத்து, குறித்த களப்பு கடல் வீதியால் சென்றவர்கள் மூன்று சிறுவர்களையும் பிரயத்தனம் மேற்கொண்டு காப்பாற்ற முயற்சித்தபோதும் இரண்டு சிறுவர்களை காப்பாற்ற முடிந்ததோடு, குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.