இலங்கையில் ஒரு கிலோ தேசிக்காயின் விலை 3000 ரூபாவை எட்டியுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தம்புள்ள உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக தேசிக்காயின் விலை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், நேற்று ஒரு கிலோ தேசிக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக நாட்டின பல பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் நாட்களில் தேசிக்காயின் விலை 5000 ரூபா வரை எட்டக்கூடிய நிலை காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.