யாழ் சுண்ணாகம் பகுதியில் இளம் குடும்பப் பெண் தாக்கப்பட்டதுடன் இரண்டு மாத குழந்தை பொலிஸாரினால் தூக்கி வீசப்பட்டதான செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸாரே காவாலிகள் போல் அடாவடித்தனம் செய்வது கண்டிக்கத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணை நடத்தி குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும்.
இந்த நாட்டில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அதிகார அராஜகம் மட்டும் குறைவதில்லை. இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தமிழர் தரப்பின் அரசியல் ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறது, என்றார்.