இரத்தினபுரி மாரப்பன தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (26) அதிகாலை 02 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, குழந்தை மற்றும் அவரது பெற்றோர்கள் இருந்துள்ள நிலையில், அவர்களில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் உரிமையாளர் சுரங்க உரிமையாளர் எனவும், சுரங்கத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.