யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் “மாம்பழம் சின்னத்தில்” சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினர்.
நேற்று யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது “மாம்பழம் சின்னத்தில்” போட்டியிடும் வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜாவிற்கு மாம்பழத்தினை வழங்கியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஈ.சரவணபவன் , தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.