டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது முதிர்ச்சி காரணமாக உடல்நிலை மோசமான நிலையில், நேற்று மரணமடைந்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா. கடந்த திங்கட்கிழமை அன்று ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 86வது வயதில் காலமானார்.
புத்திசாலித்தனம், தொலைநோக்கு பார்வை மற்றும் பணி நெறிமுறைகளுக்கு பெயர் பெற்ற ரத்தன் டாடா, தனது குடும்ப வணிகத்தை சர்வதேச சாம்ராஜ்யமாக மாற்றியவர்.
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பல பிரமுகர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்திலும் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.