தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று (13) பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாதென்றும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் செல்வராசா கஜேந்திரன், இன்று கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளார்.
துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது சட்டத்துக்கு முரணானது என்ற காரணத்தின் கீழ் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
(இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)