ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதானிகள் குழு ஒன்று அண்மையில் கூடி இந்த முடிவு உறுதி செய்ததாக அதன் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவைத் தவிர ஏனைய எந்த வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப் போவதில்லை.ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
