ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரனுக்கு தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்கான குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும் என சிறீதரன் மேலும் தெரிவித்தார்.