கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்திய விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.