நடந்து வரும் யூரோ கிண்ணம் 2024 காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி போர்த்துகலை பெனால்டி முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
வோக்ஸ்பார்க்ஸ்டேடியன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதையும் பெற்றிருக்கவில்லை.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. எனினும், எந்த அணியாளும் கோல் பெறமுடியவில்லை.
இறுதியில் பெனால்டி முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி போர்த்துகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.