கிளிநொச்சி – தர்மபுரம் – கல்லாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சுற்றிவளைப்புக்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று (05) காலை முன்னெடுக்கப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்டனர்.
குறித்த நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் ஒன்று உள்ளிட்டவை மீட்கப்பட்டதுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.