யாழ்ப்பாணம் – குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். அத்துடன் மூவர் மீட்கப்பட்டனர்.
குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகு ஒன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02) நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். இந்நிலையில், மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.