கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அதன் பிரகாரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சிறப்பு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.