இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம்
நேற்று (28) இரவு அம்பாறை – வங்களாவடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து அம்பாறை நோக்கிச் செல்லும் போது நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை மீறி பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்ப்பதற்காக, பேருந்தின் சாரதி சுதாகரித்து பேருந்தை நிறுத்த முற்பட்ட வேளை அருகில் இருந்த வாய்க்காலுக்குள் பேருந்து சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேருந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தில் 40 க்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்திருந்த நிலையில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

