யூரோ கால்பந்து தொடர் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
குழு ‘பி’ ஆட்டத்தில் ஸ்பெயின் அல்பேனியாவை வெற்றிகொண்டு தோல்வியின்றி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
அத்துடன், குரோஷியாவை 3-0 மற்றும் இத்தாலியை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஒன்பது புள்ளிகளுடன் ஸ்பெயின் குழுவில் முதலிடம் பெற்றூள்ளது.
அல்பேனியா விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றை டிரா செய்து, மற்ற இரண்டில் தோல்வியடைந்து ஒரு புள்ளியைப் பெற்று போட்டியிலிருந்து வெளியேறியது.
ஸ்பெயினிடம் அல்பேனியா தோல்வியடைந்ததால், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் இறுதிக் குழு ஆட்டத்திற்கு முன்னதாக நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதனிடையே, குரோஷியாவுடன் 1–1 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்த பின்னர், குழு ‘பி’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியனான இத்தாலி நாக் அவுட்டுக்கு தகுதி பெற்றது.
அல்பேனியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, ஸ்பெயினுக்கு எதிராக தோல்வியடைந்தது.
இதேவேளை, நாளைய தினம் நடைபெறும் குழு எஃப் போட்டியில் போர்த்துகல் அணி ஜோர்ஜியாவை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ நாளைய போட்டியில் விளையாடுகின்றார்.