ஹகுரன்கெத்த, மெதகம பிரதேசத்தில் மின்கம்பம் ஒன்று வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (20) பதிவாகியுள்ளது.
மின்சார சபைக்குச் சொந்தமான லொறியில் மின்கம்பத்தைக் கொண்டு சென்று மின்கம்பங்களை கீழ் இறக்கும் போது ஊழியர் ஒருவரின் மீது மின்கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 23 வயதுடைய அம்பேகமுவ உடபுலத்கம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.