நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்புதலின் பேரில், மேலும் 06 மாத காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று(07) வெளியிடப்பட்டுள்ளது.