அம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில்
14 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தியதில் 9 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் பின்னர் 14 வயது சிறுவனும் விஷம் குடித்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை கத்திக்குத்துக்கு இலக்கான சிறுவனின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடம்பெற்றுள்ளது. அயல் வீடுகளில் வசிக்கும் குறித்த இரண்டு சிறுவர்களும் நண்பர்கள் எனவும் தெரியவருகின்றது.
குறித்த சிறுவனின் உடலில் 6 அல்லது 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும், கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவன் வீடியோ கேம்களுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.