“அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்களம்” என்னும் நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில், பொதுநிலைப்பாடும் பொதுவாக்கெடுப்பும் என்ற தொனிப்பொருளில் கருத்துக்களம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் யாழ்.மத்தியகல்லூரி தந்தை செல்வா கோட்போர்கூடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் கருத்துரைகளை சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வழங்க உள்ளனர்.