கம்பஹா – யக்கல பகுதியில் தனியார் வகுப்புக்கு சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்றுமுன்தினம் மாலை முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல்போன மாணவிகளின் தாய்மார்களே குறித்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் யக்கல மற்றும் வீரகுல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.