திருகோணமலை – மூதூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியில் ஹயஸ் வாகனமொன்று வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று(30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஹயஸ் வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்திருந்த நிலையில் விபத்தின் போது சாரதி எவ்வித காயங்களுமின்றி மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.