அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லன்கல்ல பிரதேசத்தில் நேற்று (28) காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் நேரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் தனது மனைவியுடன் வயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.