முல்லைத்தீவில் மாணவி உயிரிழப்பு.!
முல்லைத்தீவு மாஞ்சோலைப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 23.12.22 அன்று காலை முறிப்பில் இருந்து பாடசாலை நிகழ்வு ஒன்றிற்காக மாஞ்சோலை செல்வதற்காக மாணவி மற்றும் மாணவன் இருவரும், வீதியால் சென்ற வானத்தினை மறித்து வாகனத்தின் பின்பக்கத்தில் ஏறிக்கொண்டுள்ளார்கள்.
மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் வாகனம் நிக்காமல் சென்றுள்ளது. இந்த நிலையில் நீராவிப்பிட்டி முதன்மை வீதியில் வாகனம் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி குதித்துள்ளார் அதனை தொடர்ந்து குறித்த மாணவனும் வாகனத்தில் இருந்து குதித்துள்ளார்.
வாகனத்தில் இருந்து குதித்தது கூட தெரியாத நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்தினை செலுத்திச் சென்றுள்ளார்.
இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா கொண்டு செல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் 25.12.22 அன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.