ஸ்பெய்னின் இந்த வாரம் 200 க்கும் மேற்பட்டவர்களை காவுகொண்ட கொடிய வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றி, நிவாரணங்களை மேற்கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 10 ஆயிரம் படையினரை அனுப்புவதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
இதுவரை வெள்ளத்தினால் காவு கொள்ளப்பட்டவர்களின், 205 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, வலென்சியா மாநிலத்திலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தெற்கில் அண்டலூசியாவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள வாகனங்கள், தரைமட்டமான கட்டிடங்களில் இருந்து இறந்தோரின் உடல்களை தேடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மத்தியில் பெரும் எண்ணிக்கையிலானோரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் உள்ள தெருக்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தையும் அடர்ந்த சேறுகள் மூடியுள்ளன.
அவற்றை ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் சுத்தப்படுத்தி வருவதோடு, இதற்கு முன்னதாக ஸ்பெயினில் 1996 இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, வடகிழக்கு பகுதியில் சுமார் 87 பேர் கொல்லப்பட்டனர்.