கடந்த 1ம் திகதி ஈரான் சார்பில் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இஸ்ரேல் சார்பில் ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் இஸ்ரேல் -ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஆண்டு போர் நடவடிக்கையை தொடங்கியது. ஹமாஸ் என்பது ஈரான் ஆதரவு அமைப்பாகும். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்படும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான், இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இது இஸ்ரேலுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இருப்பினும் இஸ்ரேல் காசா மீதான போர் நடவடிக்கைக்கு நடுவே ஹிஸ்புல்லா மீதும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மூலம் கொன்று குவித்துள்ளது.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. சுமார் 185 ஏவுகணைகளை ஈரான் தனது நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அலிவ் மற்றம் அதனை சுற்றிய இடங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்காமல் இருந்து வந்தது.
ஆனாலும் கூட உரிய நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று அந்த நாடு அறிவித்தது. அதன்படி இன்று அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.