ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினருமான வேலுகுமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்த வேலுகுமார், தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.