ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கட்சிகளுடன் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய புதிய கூட்டணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளராக லசந்த அழகியவன்னவும் பொருளாளராக சாமர சம்பதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் தேர்தலில் இந்த புதிய கூட்டணி கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.