மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில், நேற்று முன்தினம்(6) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (6) மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 67 வயதுடைய வயோதிபர் மீது அந்த வீதியூடாக அதி வேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த வயோதிபர் நேற்று (08) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.