சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்க நேரிடும்.
குறித்த இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு கட்சியின் செயற்குழுவினால் தடை விதிக்கப்பட்டது.
எனினும், இருவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதையடுத்து, ஐக்கியதேசியகட்சியினால் தடை நீக்கப்பட்டது.