நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கை மையப்படுத்தி தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று (08) கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் பொதுவேட்பாளரை அறிவிப்பதில் பல நாட்களாக இழுபறிப்பட்ட நிலையில் பலரின் பெயர்கள் பரிசிலிக்கப்பட்ட நிலையில் இறுதியாக அரியநேந்திரனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.