ஜனாதிபதி வேட்டபாளரும், எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன.
குறித்த கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை, அர்ஜுன ரணதுங்கவின் மக்களின் குரல் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகரவின் தரப்பு உள்ளிட்ட 08 கட்சிகள் கூட்டணியின் பிரதான பங்காளிகளாக உள்ளன.
அதேபோன்று நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் எம்.பிகளும், பல்வேறு சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.