ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த 5 ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அது நாளை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.