கிளிநொச்சியில் மணல் அகழ்விற்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய நான்கு டிப்பர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது. கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

