நாட்டில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு
புதிய விலை 3,690 ரூபாவாகவும்,
5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு
புதியவிலை 1,482 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு விலை 18 ரூபாயினால் குறைக்கப்பட்டு,
புதியவிலை 694 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.