நெடுந்தீவுக்கான படகு போக்குவரத்து மார்க்கங்களின் பிரதானமாக நெடுந்தாரகை காணப்படுகின்ற நிலையில், மீண்டும் அடுத்த மாதம் முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.
நெடுந்தாரகை திருத்தப்பணிகளுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், திருத்த வேலைகள் முடிவுறும் நிலையில் அடுத்த மாதம் படகு சேவைக்கு திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை – நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையை குமுதினி மற்றும் வடதாரகை என்பன வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.