ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று (11) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், வேனில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.