கட்டுநாயக்க விமான நிலையத்தில் உகண்டா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொக்கேன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (08) காலை
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதான உகண்டாவை சேர்ந்தவர் எனவும், அவர் கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய பின்னர் கட்டாரில் இருந்து நாட்டுக்கு வந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 14 கொக்கெய்ன் மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.