யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றுக் காணிக்குள் இருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை குறித்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உரும்பிராய் அன்னங்கை வீதியில் அமைந்துள்ள வெற்றுக் காணிக்குள் இருந்து இரண்டு வாள்களும் கஜேந்திர வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.