வடமராட்சி – கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தி வந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி நாளை (02) இடம்பெறவுள்ளது.
விளையாட்டுக் கழகத்தலைவர் வினோத் தலைமையில், நாளை இரவு 7.00 மணியளவில் றேஞ்சஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த இறுதிப்போட்டிக்கு, பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
குறித்த இறுதிப்போட்டியில், யாழ்.மாவட்டத்தின் பலம் பொருந்திய அணிகளான இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
குறித்த இறுதிப்போட்டிக்கு, ஆயிரக்கனக்காண ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மைதானத்தில் பலத்த பாதுகாப்பும், சிறப்பான ஏற்பாட்டு ஒழுங்கமைப்புகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.